Wednesday, 12 February 2014

இப்படியும் ஒரு திருட்டா...?



 நின்று கொண்டு இருந்த காருக்கு முன்னால் 100 ரூபாய் நோட்டுகளை வீசி கார் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் ராமநாதன் (45). ஆடிட்டர். இவரிடம் அதே மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அண்ணா சாலையில் எல்ஐசி பில்டிங் அருகே உள்ள செங்கல்வராயர் கட்டிடத்திற்கு ராமநாதன் காரில் வந்தார்.

பின்னர், அங்குள்ள அலுவலகத்துக்கு சென்றார். காரை வெளியே நிறுத்தியிருந்தார். டிரைவர் வெங்கடேசன் காருக்கு அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, காருக்கு முன்னால், மர்ம நபர்கள் 2 பேர் நைசாக 6, 100 ரூபாய் நோட்டுகளை வீசினர்.

இதை கண்டு பரவசம் அடைந்த வெங்கடேசன் அதை நைசாக எடுக்க முயன்றார். இதை பயன்படுத்தி கொண்ட ஆசாமிகள் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி காருக்குள் சூட்கேஸில் இருந்த ரூ.4 லட்சம் மற்றும் லேப்டாப்பை அபேஸ் செய்து ஓட்டம் பிடித்தனர்.

ரூ.600ஐ எடுத்துக் கொண்டு திரும்பிய டிரைவர் ரூ.4 லட்சம் மாயமானதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து ஆடிட்டருக்கு தகவல் கொடுத்தார். அவரும் வந்து பார்த்தார். அதற்குள் மர்ம நபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

பின்னர், இது குறித்து, வெங்கடேசன் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment