தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் படிக்கும் பயிற்சி நர்சுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.
உதவித்தொகை பெறாத இதர வகுப்பினர் எங்களுக்கும் உதவித்தொகை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை அரசு ஏற்று அனைவருக்கும் உதவித்தொகை உண்டு என்று அறிவித்தது.
இதைத்தொடர்ந்து அதற்கான அரசாணையை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். அதாவது உதவித்தொகை பெறாத 1,355 பேருக்கு முதல் ஆண்டு மாதம் தோறும் 600 ரூபாயும், 2-வது வருடம் மாதம் தோறும் 700 ரூபாயும், 3-வது வருடம் மாதம் தோறும் 800 ரூபாயும் கொடுக்கப்படும். இந்த உதவித்தொகை இனிமேல் அனைவருக்கும் பொருந்தும்.
இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment