Wednesday, 12 February 2014

நான்கு டீன் ஏஜ் பெண்களின் தந்தையாக கமல்ஹாசன் புதிய அவதாராம்...!



உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் தனது விஷ்வரூபம் -2 படத்திற்குப் பிறகு கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கத்தில் உத்தமவில்லன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் காஜல் அகர்வால், தமன்னா மற்றும் திரிசா ஆகியோர் நடிக்கலாம் என்று இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் எழுதி, இயக்கிவரும் விஷ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம்பாகம் விரைவில் திரைக்குவர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து கமல் நடிக்கும் படம் உத்தமவில்லன். இப்படத்தில் கமல்ஹாசன் நான்கு டீன் ஏஜ் பெண்களின் தந்தையாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிப்பதற்கான நாயகிகளைத் தேடிவரும் படக்குழு காஜல் அகர்வால், தமன்னா மற்றும் திரிசா ஆகியோரிடம் கேட்டுள்ளதாகவும், விரைவில் இப்படத்தின் நாயகிகள் யார் என்பது வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து மலையாளப்படமான திரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன்.

0 comments:

Post a Comment