காதல் திருமணம் செய்துகொண்ட சிநேகாவும், பிரசன்னாவும் இப்போது தனிக் குடித்தனம் நடத்தி வருவது சினிமா வட்டாரமே தெறிந்த செய்திதான்!
ஆனால் தான் இதுவரை சினிமாவில் நடித்து சம்பாதித்த சொத்துக்களையும், பணத்தையும், நகை நட்டுகள் எல்லாவற்றையும் பிறந்த வீட்டுக்கே விட்டுக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார் என்ற தகவல் கொஞ்சம் சங்கடத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தத்தான் செய்தது. இப்போது தியாகராயநகரில் வாடகை பிளாட்டில் வசிக்கிறார்கள்.
சிநேகா, பிரசன்னா இருவருக்குமே சொல்லிக் கொள்கிற மாதிரி படங்களும் கைவசம் இல்லை. அதனால் வருமானமும் கம்மி!
பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வந்த அழைப்புகளை வேண்டாம்... முடியாது... என்று இதுவரை மறுத்து வந்தார் சிநேகா! இப்போது வேறு வழி இல்லாமல் சின்னத்திரைக்கு வந்துவிட்டார்.
"சன் டிவி'யில் ஒளிபரப்பாக இருக்கும் மிகப்பெரிய ""கேம் ஷோ'' ஒன்றில் பிரதானமாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிநேகா! பளபளக்கும் பட்டுப் புடவையிலும் ஜொலி ஜொலிக்கும் நகைகளிலும் மின்னலடிக்கிறார். இதற்காகவே சன் டிவி படப்பிடிப்பு அரங்கில் பிரம்மாண்டமான "செட்' போடப்பட்டு கடந்த 11-ந் தேதி முதல் சூட்டிங் சுடச்சுட நடந்து கொண்டு இருக்கிறது.
சிநேகாவின் சிரிப்பழகையும், கொஞ்சிக் கொஞ்சி பேசும் தமிழையும், மிக விரைவில் சன் டிவியில் காணப் போகிறார்கள் ரசிக பெருமக்கள்! வெள்ளித்திரையில் இருந்து விடைபெற்று விட்ட சிநேகாவை காணவில்லையே? என்று காத்திருந்த கண்களுக்கு விருந்தாக அமையப் போகிறது இந்த சின்னத்திரை "கேம் ஷோ'!
0 comments:
Post a Comment