கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான மனாசினக்கரே என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிப் படங்களில் இன்றளவும் முன்னணி நடிகையாக இருந்துவரும் நயன்தாரா தனக்கு ஹிந்திப் படங்களில் நடிக்கும் விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
தென்னிந்திய மொழிப்படங்களில் நடிப்பதே தனக்குத் திருப்தி அளிப்பதாக இருப்பதாகவும், ஹிந்தியில் நடிக்கும் ஆசை தற்போதைக்கு இல்லை என்றும் கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இயக்குனர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படியே தான் நடித்துவருவதாகவும், இயக்குனர்களின் நடிகையாக இருப்பதே தனது விருப்பமென்றும் கூறியுள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா முக்கியமானவராகத் திகழ்கிறார். நயன்தாரா, உதயநிதி நடிப்பில்
உருவாகியிருக்கும் இது கதிர்வேலன் காதல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 14ல் வெளியாகவுள்ளது. மேலும் சிம்புவுடன் இது நம்ம ஆளு திரைப்படத்திலும், உதயநிதியின் நண்பேன்டா திரைப்படத்திலும், ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நடித்துவருகிறார்.
0 comments:
Post a Comment