Tuesday 11 February 2014

‘பேஸ்மேக்கர்’ -அறுவை சிகிச்சையின்றி பொருத்திய இந்திய மருத்துவர்...!



அமெரிக்காவில் புதுமையான பேஸ்மேக்கரை அறுவை சிகிச்சையின்றி நோயாளியின் உடலில் பொருத்தி இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர்
 விவேக் ரெட்டி சாதனை புரிந்துள்ளார்.

சிறிய மெட்டல் சில்வர் டியூப் வடிவில் உள்ள இந்த பேஸ்மேக்கர், சில சென்டிமீட்டர் நீளம் மட்டுமே கொண்டது. இது, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ்மேக்கரின் அளவில் 10இல் ஒரு பகுதியைவிட சிறியது.இதனைப் பொறுத்திக் கொண்டவர், வழக்கம்போல செயல்படமுடியும். தற்போது உள்ள பேஸ்மேக்கரை விட, இது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

இதய துடிப்பை சீராக்க நோயாளிகளின் உடலில் ‘பேஸ்மேக்கர்’ என்ற கருவி பொருத்தப்படுகிறது. தற்போது ஆபரேசன் மூலம் அது பொருத்தப்பட்டு வருகிறது.ஆனால் ஆபரேசன் இல்லாமல் ‘பேஸ்மேக்கர்’ கருவியை இதயத்தில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி டாக்டர் ஒருவர் பொருத்தியுள்ளார். அவரது பெயர் விவேக் ரெட்டி. இவர் நியூயார்க்கில் உள்ள ‘தி மவுண்ட் சினாஸ்’ ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார்.

தற்போது இதய நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும் ‘பேஸ்மேக்கர்’ ஈயத்தால் தயாரிக் கப்பட்டது. ஆனால் இது சில்வர் மெட்டலால் தயாரிக்கப்பட்ட சிறிய ‘டியூப்’ வடிவிலானது.இது வழக்கமான ‘பேஸ்மேக்கர்’ கருவியை விட 10 மடங்கு மிகச்சிறியதாகும். இக்கருவியை அடிவயிற்றுக்கும், தொடைக்கும் இடையே செல்லும் ரத்தக் குழாய் மூலம் இதயத்துக்கு செலுத்தி டாக்டர் விவேக் ரெட்டி இச்சாதனை படைத்துள்ளார்.

இந்த அதி நவீன பேஸ்மேக்கர்’ கருவி ‘நானோ’ டைப் ஆகும். இதை செயின்ட் ஜூட நிறுவனம் தயாரித்து பல பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு ‘லெட்லெஸ்–2’ என பெயரிட்டுள்ளனர்.

 இக்கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதன் மூலம் அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவில் 670 பேருக்கு பொருத்தப்பட உள்ளது. இவை 50 ஆஸ்பத்திரிகள் மூலம் நோயாளிகளின் உடலில் செலுத்தப்பட உள்ளது.‘‘சர்வதேச அளவில் தற்போது 40 லட்சம் இதய நோயாளிகளுக்கு ‘பேஸ்மேக்கர்’ கருவி மூலம் உயிர் வாழ்கின்றனர். ஆண்டுக்கு 7 லட்சம் பேர் இக்கருவி பொருத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க்து.

0 comments:

Post a Comment