Sunday, 9 February 2014

ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் விந்தணுக்களை அதிகரிக்கும்...



ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும்.

மேலும் நிபுணர்களும், சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறுகின்றனர். இந்த கூற்று ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தான்.

சரி, இங்கு கேரட்டை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்தால், நிச்சயம் இனிமேல் கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வீர்கள்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

ஆண்கள் அவ்வப்போது இரத்தத்தைத் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு வாரத்திற்கு 2 முறை கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.

விந்தணுக்களை அதிகரிக்கும்

ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.

செரிமானம்

கேரட் செரிமானத்திற்கும் உதவும். ஆகவே செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.

வயிற்று கோளாறு

கேரட்டை ஆண்களும் சரி, பெண்களும் சரி தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும். அதிலும் வாயுத் தொல்லை இருக்கும் போது, கேரட் சாப்பிட நீங்கும்.

கொலஸ்ட்ரால்

ஆண்கள் எப்போதுமே தங்களது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவானது கட்டுப்பாட்டுன் இருக்கும்.

ஆரோக்கியமான கண்கள்

கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்

கேரட் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பல் பராமரிப்பு

கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வலியுடைய மூட்டு வீக்கம்

ஆண்களும் சரி, பெண்களும் சரி, இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வலியுடைய மூட்டு வீக்கம். இத்தகைய மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.

புற்றுநோயை தடுக்கும்

கேரட்டில் உள்ள நன்மைகளில் சிறப்பான ஒன்று தான் புற்றுநோயை தடுக்கும் என்பது. ஆகவே தினமும் கேரட் சாப்பிட்டு புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகியிருங்கள்.

நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் எளிதில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை வலுவானதாக மாற்றும்.

நீரிழிவு

நீரிழிவு இருக்கும் போது கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இன்சுலினை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

மலச்சிக்கல்

குடலியக்கம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு சேரட் சாப்பிட்டு வாருங்கள்.

இரத்த அழுத்தம்

கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

0 comments:

Post a Comment