சேந்தமங்கலம் : நாமக்கல் அருகே முகூர்த்த நேரத்தில் மணமகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், மணப்பெண் தாலியை கழற்றி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் அடுத்த சேந்தமங்கலம் சேர்ந்தவர் ராமசாமி (26). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சேர்ந்த ராதாவுக்கும் (பெயர்கள் மாற்றம்) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
கருமலை முருகன் கோயிலில் நேற்று காலை திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்தன.முகூர்த்த நேரம் நெருங்கியதும், மணமகள் கழுத்தில் தாலி கட்டு வதற்காக வந்த ராமசாமிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் அவரது வாயில் ரத்தம் கொட்டியது.
இருந்த போதிலும் ராமசாமி, ராதாவுக்கு தாலி கட்டினார். மாப்பிள்ளைக்கு வலிப்பு இருப்பதை பார்த்து மணப்பெண் அதிர்ச்சியடைந்தார். உடனே, தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி வீசினார். மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவோ கெஞ்சியும் ராமசாமியை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இது பற்றி தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பெண் வீட்டார் ஏற்க மறுத்ததால் சீர்வரிசை பொருட்களை திருப்பி கொடுத்த மாப்பிள்ளை வீட்டார், வீடு திரும்பினர். இதற்கிடையில், ராமசாமி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மணமகனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், மணப்பெண் தாலியை கழற்றி வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 comments:
Post a Comment