Sunday, 23 March 2014

ஜில் ஜங் ஜக் - ஒரு அலசல் - எல்லாமே சில காலம்தான்...!




சந்தில் சிந்து  பாடுவது கேள்விபட்டு இருப்பீர்கள், ஆனால் இப்போது தான் கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஒரு காலத்தில் சினிமாவை தன் நக்கல் பேச்சாலும், நகைச்சுவை உணர்வாலும் கட்டி போட்ட நம்ம கவுண்டமணி, சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்த காலத்தில் பல பேர் காளான்போல் நுழைந்தனர், அந்த வரிசையில் முதலில் நிற்பவர் சந்தானம்.

சந்தானம் பண்ற காமெடிகள் அனைத்தும் கவுண்டரின் ஸ்டைலில் உள்ளவை.

காலப்போக்கில் “டூப்ளிகட்  கவுண்டர்”  என்று கூட சந்தானத்தை கிண்டல் அடித்தார்கள், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் திசையை நோக்கி பயணித்தார் சந்தானம்.

பிறகு அவருக்கு சுத்தி சுத்தி சுக்கிர திசை அடிக்க ஆரம்பித்தது, வெற்றி மேல் வெற்றி, பல ஹீரோக்கள் அவர் கூட நடிக்க ஓத்த காலில் நின்றார்கள், சில படங்கள் கூட அவரால் ஓடியது, குறிப்பாக இயக்குனர் ராஜேசுடன் இவர் கூட்டணி சேர்ந்த படங்கள் எல்லாம் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பின.

ஆனால் அதே இயக்குனர் நடிப்பில் தீபாவளி அன்று வெளி வந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா படு தோல்வி அடைந்ததால், சந்தானத்தின் காமெடிகள் சலித்து விட்டன என்ற  பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் உலாவ ஆரம்பித்துவிட்டன, இதையும் தாண்டி பல சம்பள சர்ச்சையிலும் சிக்கினார் சந்தானம்.

இந்த இடைப்பட்ட கேப்பில் என்ட்ரி ஆனார் நடிகர் சூரி, வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான அவர், அதற்கு அடுத்ததாக நடித்த சில படங்கள் வர்த்தக ரீதியாக  வெற்றி அடைந்தன.

இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றி அடைந்து, அவரின்  காமெடி அனைவராலும் கவரப்பட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மோஸ்ட் வாண்டட் கமெடியனாக உருவெடுத்தார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டாக்களை அசராமல் சாப்பிட்டு கடைக்காரரை அசரவைத்ததுடன்,  நம்மையும் சேர்த்து இன்று வரை அசரவைத்தவர் சூரி. அதனால் தான்  இன்று வரை அவர் பரோட்டோ சூரி என்று ரசிகர்களால்   அழைக்கப்படுகிறார்.

படங்கள் மேல் படங்கள் கமிட் ஆக தனக்கு ஒரு குரூப்பையும் அமைத்து கொண்ட  அவர் மீது ஹீரோக்கள், மற்றும் இயக்குநர்களின் பார்வை திரும்பியது.

சந்தானத்திற்கு அடுத்தபடியாக காமெடி லிஸ்ட்டில் நம்ம தாம் இருக்கோம் என்பதை தெரிந்துகொண்ட சூரி, தற்போது கணிசமாக சம்பளத்தையும் உயர்த்திவிட்டாராம்.

இதுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக ரீஎண்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நம்ம கவுண்டர்.

தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் 49 ஓ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

ஆகமொத்தத்தில் பந்தயத்தில் ஜெயிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment