'கோச்சடையான்' வெளியீட்டு தேதியை பொறுத்தே 'தெனாலிராமன்' வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு மறுபடியும் நடித்து வரும் படம் 'தெனாலிராமன்'. . ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் யுவராஜ் இயக்கி வருகிறார். இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. 'கோச்சடையான்' வெளியீட்டு தேதியைப் பொறுத்தே, 'தெனாலிராமன்' தேதி முடிவு செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார்கள்.
இது குறித்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா தனது ட்விட்டர் தளத்தில், "'தெனாலிராமன்' படத்தின் சென்சார் அடுத்த வாரம் நடைபெறும்.
ஏப்ரல் 1ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவும், 11ம் தேதி படத்தினை வெளியிடலாம் என்றும் திட்டமிட்டு இருக்கிறோம்.
ஆனால் 'கோச்சடையான்' வெளியீட்டு தேதியைப் பொறுத்தே 'தெனாலிராமன்' வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
ரஜினியுடன் மோதும் வடிவேலு என்ற செய்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment