Thursday, 13 February 2014

விந்தைகள் புரியும் நானோ தொழில்நுட்பம்..!



 நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி டெக்ஸ்டைல், வாட்டர் பூரூப், பெயிண்ட் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுப்பட்டிருக்கும் வதோதராவில் சேர்ந்த ஜைடெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் ரங்கா சென்னை வந்திருந்தபோது அவருடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலிருந்து..

உங்களை பற்றி..?

நாகபுரியில் இருக்கும் என்.ஐ.டி. யில் கெமிக்கல் என்ஜீனியரிங் படித்தேன். அதன் பிறகு பாலிமர் சயின்ஸில் அமெரிக்காவில் இருக் கும் லிஹைய் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். பிறகு அமெரிக்கவில் இருக்கும் ஒரு நிறுவனத்திலே சில ஆண்டுகள் வேலை செய்தேன். 1987-ம் ஆண்டு இந்தியா வந்து சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

இப்போதே யாரும் தொழில் துவங்க தயாராக இல்லை. அது மட்டும் இல்லாமல் நீங்கள் அமெரிக் காவில் செய்யும் வேலையை விட்டு இந்தியாவுக்கு வர காரணம் என்ன?

என் குடும்பம் பிஸினஸ் குடும்பம். நானே இந்தியா வர தயங்கினால் வேறு யார் இங்கு வந்து தொழில் துவங்க முடியும் என்பதால் இந்தியாவுக்கு வந்தேன்.

நானோ டெக்னாலஜி பற்றி சாதாரண மக்களுக்கு புரியும்படி சொல்லுங்களேன்..?

ஒரு பொருளின் தடிமன் 1 முதல் 100 நானோ மீட்டருக்குள் இருப்பதைதான் நானோ டெக்னா லஜி என்று அறிவியல் ஏற்றுக்கொள் கிறது. ஒரு வேளை 100 நானோ மீட்டருக்கு மேல் செல்லும்பட்சத் தில் அது மைக்ரோடெக்னாலஜி என்று சொல்லுவார்கள்.

கடந்த 30, 40 வருடங்களுக்கு மேல் இந்த தொழில்நுட்பம் இருந் தாலும் சமீபகாலமாகதான் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

எவ்வாறு பயன்படுத்த முடியும்..?

சாலைகள் அமைக்க நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் சாலைகளின் ஆயுள் அதிகரிக்கும். நாங்கள் கொடுக்கும் பொருள்களைப் பயன் படுத்துவதன் சாலைகளின் தரம் அதிகரிக்கும். சுமார் 15 ஆண்டுகள் வரை சாலைகள் தரமானதாக இருக்கும். இந்தச் சாலைகள் மழை பெய்தாலும் பாதிப்படையாது. அதே போல டெக்ஸ்டைல் துறை, சொகுசு வாகனங்களுக்கு தயாராகும் ஏர்பேக் ஆகியவற்றுக்கு இந்தத் தொழில்நுட்பம் பயன்படும்.

இப்போது வீடுகளுக்கான வாட்டர் புரூப் மேல் தளத்துக்கு மட்டுமே போடப்படுகிறது. அதற்கே அதிகம் செலாகிறது. இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாட்டர் புரூப் அமைக்கும் போது செலவு குறையும். வீடு முழுவதையும் குறைந்த செலவில் தண்ணீரி லிருந்து பாதுகாக்க முடியும்.

அடுத்து எந்த துறைகளில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறீர்கள்.?

விரைவில் பெயின்ட் தொழிற் சாலை அமைக்க இருக்கிறோம். அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஏற்கெனவே முன்னணி நிறுவனங்கள் இருக்கும் போது புதிதாக பெயின்ட் நிறுவனம் ஆரம்பிக்கும் போது அதிக செலவு ஆகுமே? கூடவே மார்க்கெட்டின் செலவுகள் வேறு?

பெயின்ட் தயாரிப்பதற்கான அனைத்து மூலப்பொருட்களையும் நாங்களே தயாரிப்பதால், எங்களால் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். செலவுகளையும் குறைக்க முடியும்.

0 comments:

Post a Comment