ஆஹா கல்யாணம் படம் பார்த்தவர்களுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி கிடைத்திருக்கும், அது வாணி கபூரும், நானியும் கொடுத்துக் கொண்ட லிப் லாக் கிஸ்.
வாணியும் நானியும் பார்ட்டியில் நன்றாக குடித்து விட்டு குடிபோதையில் முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு எல்லாமே நடந்து முடிகிறது. நண்பர்களாக இருந்தவர்களை இந்த காரியம் பிரிக்கிறது.
படத்தில் 2 நிமிடங்கள் இந்த முத்தக் காட்சி இருந்ததாம். தணிக்கை -குழுவினர் அதை 50 சதவிகிதம் குறைக்கச் சொன்னதை தொடர்ந்து ஒரு நிமிடமாக அந்த முத்தக் காட்சி குறைக்கப்பட்டது.
அதுவும் தொடர்ச்சியாக 3 விநாடிகளுக்கு மேல் இருக்க கூடாது என்று கூறிவிட்டார்களாம். அதனால்தான் வாணியும் நானியும் விட்டு விட்டு முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள்.
“ஸ்கிரிப்டுக்கு தேவைப் பட்டதால்தான் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்தேன். அதை இவ்வளவு சீரியாசக எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கவில்லை.
அதே மாதிரி குடிக்கிற காட்சியில் நடித்ததையும் சீரியசாக சொல்கிறார்கள். இந்த காட்சி பற்றி படத்தின் இயக்குனர்தான் விளக்கம் சொல்ல வேண்டும். நான் நடிகை, இயக்குனர் சொன்னதை செய்தேன்” என்று முத்தம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் வாணி கபூர்.
0 comments:
Post a Comment