Tuesday, 25 February 2014

சென்ஸார் போர்டு முதல்முறையாக செய்த நல்ல காரியம் - அதிர்ச்சியில் திரையுலகம்..!



சினிமாவில் குடிக்கிற சீன்கள் இல்லாத படங்களே இல்லை. எந்த படமாக இருந்தாலும் டைட்டில் வைக்காமல் கூட வந்து விடும் போலிருக்கிறது. ஆனால் டாஸ்மாக் சீன்கள் இல்லாமல் வருவதில்லை.

ஆனால் அதையெல்லாம் தாராளமாக அனுமதிக்கும் சென்ஸார் போர்டு முதல்முறையாக ஒரு டாஸ்மாக் பாட்டுக்கு தடை போட்டுள்ளனர்.

குரு சூர்யா மூவீஸ் தயாரிப்பில் R .K அன்பு செல்வன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் தான் ‘என் நெஞ்சை தொட்டாயே..’ இதில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. அதில் குடி குடி …. என ஆரம்பிக்கும் பாடலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார் .

அந்தப்பாடலைப் பார்த்த சென்ஸார் போர்டு உறுப்பினர்கள் அந்தப் பாடலில் வரும் சில வார்த்தைகளுக்கு தடை விதித்து ,அதற்கு மாற்று வரியை சேர்க்கச் சொல்லியிருக்கின்றனர்.

படக்குழுவும் அவ்வாறே புதிய வரிகளை பதிவு செய்து ,சென்ஸார் போர்டில் “U ” சர்டிஃபிகேட் வாங்கியபோதும் வேல்முருகன் பாடிய குடி குடி …என துவங்கும் அந்த பாடலை தியேட்டர்களில் திரையிடலாம் , ஆனால் அனைத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்துள்ளனர் .

0 comments:

Post a Comment