Thursday, 13 March 2014

வேகமாக கல்லாக்கட்டப்போறேன் - தாய் மீது சபதம் எடுத்த கானா ஸ்பெசலிஸ்ட்....!




கானா பாடகர்கள் பலர் சினிமாவில் பாடியுள்ளனர். என்றாலும் அவர்களெல்லாம் ஓரிரு படங்களில் பாடியதோடு, சீசன் பறவைகள் போன்று காணாமல் போய் விட்டனர்.

ஆனால் கானா பாலா மட்டுமே பல படங்களில் தொடர்ந்து பாடியபடி, கோலிவுட்டின் கானா ஸ்பெசலிஸ்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில், அட்டகத்தி, உதயம் என்எச்- 4, ராஜாராணி, சூதுகவ்வும், நிமிர்ந்து நில் என 20 பாடல்கள் வரை பாடிவிட்டார்.

அதில், ஆடி போனா ஆவணி, நடுகடலுல, காசு பணம் துட்டு மணி மணி, ஓரக்கண்ணால என பல பாடல்கள் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தன.

இந்த நிலையில், காசு பணம் துட்டு மணி மணி, ஓரக்கண்ணால போன்ற பாடல்களில் தானே திரையிலும் தோன்றி நடனமாடிய கானா பாலா, தற்போது சில புதிய படங்களில் குஜிலிகளுடன் கிளுகிளுப்பு நடனமும் ஆடத் தொடங்கியிருக்கிறார்.

இதனால் வேறு எந்த கானா பாடகர்களுக்கும் கிடைக்காத வரவேற்பு அவருக்கு தற்போது கிடைத்திருக்கிறது.

இப்படி பின்னணி பாடுவது, குத்தாட்டம் ஆடுவது என கானா பாலாவின் கலக்கல் அதிகரித்து வருவதையடுத்து, அவருக்கான கூலியும் படத்துக்குப்படம் எகிறத் தொடங்கியிருக்கிறது.

ஆக, காற்றுள்ளபோதே தூறறிக்கொள்வோம் என்று வேகமாக கல்லாக்கட்டத் தொடங்கியிருக்கிறார் மனிதர்.

0 comments:

Post a Comment