விமல்,சூரி,பிரியா ஆனந்த் மற்றும் தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துவரும் திரைப்படம் ஒரு ஊர்ல ரண்டு ராஜா.
ஜெயம்கொண்டான், சேட்டை முதலிய படங்களை இயக்கிய R.கண்ணன் இப்படத்தினை இயக்கிவருகிறார்.
சமீபமாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்புகளின் போது விபத்தில் சிக்கவிருந்த தம்பி ராமைய்யாவை தனது சமயோசித புத்தியினால் சூரி
காப்பாற்றியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
விமல்,பிரியா ஆனந்த், சூரி மற்றும் தம்பி ராமைய்யா ஆகியோர் நடிக்க வேண்டிய ஒரு காட்சியின்படி இவர்கள் நால்வரும் ஒரு காரில் பயணிக்க
வேண்டுமாம். இக்காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது தம்பி ராமைய்யா மட்டும் காரில் சீட் பெல்ட்டுடன் அமர்ந்திருந்ததாகவும், ட்ரைவர் இன்றித் திடீரென இந்தக் கார் ஓடத் துவங்கியதாம்.
எதிர்பாராமல் நிகழ்ந்த இந்நிகழ்ச்சியைப் பார்த்த சூரி, தம்பி ராமைய்யா அமர்ந்திருந்த கார் ஏரியின் அருகில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்ததும்
அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக காருக்குள் பாய்ந்த சூரி காரின் பிரேக்கினை அழுத்தி காரினை நிறுத்தியுள்ளார்.
இதன்மூலம் ஏரியில் விழுந்து
நொறுங்கவிருந்த காரும், அதற்குள் அமர்ந்திருந்த தம்பி ராமைய்யாவும் காப்பாற்றப்பட்டதாக இப்படத்தின் இயக்குனர் கண்ணன் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment