Friday, 7 March 2014

ஒரே ஒரு வதந்தியால, எப்படி இருந்த நா இப்டி ஆயிட்ட...!




கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வதந்தி. நல்லவேளை… இது வதந்தியாகவே முடிந்தது. அதுவரை நிம்மதி.


கோடம்பாக்கத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மாறி மாறி பறந்த செல்போன் அழைப்புகளுக்கு ‘இருங்க விசாரிச்சுட்டு சொல்றேன்’ என கூறிய பலரும் அடுத்த நொடி நாலாபுறமும் நியூசை பரவ விட்டார்கள்.

என்னவாம்?


நடிகர் விவேக்குக்கு திடீர் நெஞ்சுவலி. அவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள் என்பதுதான் அந்த பரபர நியூஸ்.

ஆளாளுக்கு ‘அப்படியா? அப்படியா?’

 என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு நம்ப முடியாமல் தவிக்க,

 ‘அதெல்லாம் இல்லீங்க. நல்லாதான் இருக்காரு’

என்று பதில் சொல்லி சொல்லி மாய்ந்தவர் அவரது நண்பரும் உதவியாளருமான ‘செல்’ முருகன்தான்.

அன்றைக்குதான் அவர் தன் பெயருக்கான காரணத்தை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்.

ஒருவழியாக விவேக்கின் காதுக்கே விஷயத்தை கொண்டு போனார் செல் முருகன். அட… இது நல்லாயிருக்கே, இப்படியெல்லாம் வதந்திகள் வந்தா ஆயுசு கெட்டியாம்ல?


என்று கேட்டு வாய்விட்டு சிரித்தாராம் விவேக். ‘இப்பதான் கமல் சார் படத்துல நடிக்கறதுக்கு கூப்பிட்டுருக்காங்க.


 (இத்தனை வருஷ சினிமா வாழ்க்கையில விவேக்கும் கமலும் இணைந்து நடித்தேயில்லை என்கிறது ஒரு சினிமா புள்ளிவிபரம்) அதுக்குள்ளே எவனுக்கோ பொறுக்கல போலிருக்கு’ என்று சந்தடி சாக்கில் வதந்தி கிளப்பியவர்களையும் திட்டி தீர்த்த விவேக், வேறொரு படப்பிடிப்புக்காக அன்றிரவே கிளம்பிவிட்டாராம்.

இதற்கிடையில் நான்தான் பாலா என்றொரு படத்தில் விவேக் ஹீரோவாக நடித்தாரல்லவா?

அந்த படத்தை தனது நெருங்கிய சினிமா பிரபலங்களிடம் சொல்லி படத்தை விற்றுக் கொடுக்கிற வேலையிலும் இறங்கியிருக்கிறார் விவேக். அவரே ஹீரோ என்பதால்தான் இந்த மெனக்கெடல்.

0 comments:

Post a Comment