நடிகை நவ்நித் கவுர் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி வருகின்றன. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
நவ்நித் கவுர் தமிழில் விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்தார். அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
நவ்நித் கவுருக்கும் மகராஷ்டிரா மாநிலம் பத்னேரா சட்டமன்ற தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணாவுக்கும் 2011–ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை.
தற்போது நவ்நித் கவுர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பணயாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவரது ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி உள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றிலும் இந்த படங்கள் அனுப்பப்படுகின்றன. அரகுறை ஆடையில் ஆபாசமாக இருப்பதுபோல் இந்த படங்கள் உள்ளது.
இதனால் நவ்நீத் கவுர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த படங்களை இன்டர்நெட்டில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நவ்நித் கவுர் கணவரும் எம்.எல்.ஏ.வுமான ரவிராணா கூறும்போது, நவ்நித் கவுர் பெயருக்கு களங்கள் ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த படங்களை பரவவிட்டுள்ளனர் என்றார்.
0 comments:
Post a Comment