இன்றைய சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்து அமெரிக்க வாழ் இந்தியரான விஞ்ஞானி ஒருவர் சாதனை படைத்துள்ளனர்.
இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை.
அப்படி மனிதனால் தயாரிக்கப் பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic).இந்நிலையில் ‘பைரோலிசிஸ்’ முறையில் பிளாஸ்டிக் பைகளை எரித்து இதில் இருந்து 30 முதல் 50 சதவீதம் கச்சா எண்ணையை எடுத்து டீசல் தயாரித்துள்ளார்.அவரது பெயர் பிரஜேந்திர குமார் ஷர்மா. அமெரிக்க வாழ் இந்தியரான இவர் இல்லினாய்ஸ் ஆய்வு மையத்தில் விஞ்ஞானி ஆக பணிபுரிகிறார்.
டீசல் மட்டுமின்றி இயற்கை எரிவாயு, நாப்தா, கேசோலின், மெழுகு, உராய்வு ஆயில் உள்ளிட்டவற்றையும் தயாரிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் விரைவில், பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதும் முதல் கட்டமாக நுாறு கோடி 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடப்பட்டு சோதனை முயற்சியாக வேறுபட்ட வானிலை மாற்றங்கள் கொண்ட கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இந்த நோட்டுகள் புழக்கத்தில் விடப்படப் போவதும் குறிப்பிடத்தக்க்து,
0 comments:
Post a Comment