Friday 14 February 2014

டெல்லி முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவால் ராஜினாமா..!



தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் அனுபவமில்லாத நாங்களும் சில நேரங்களில் ஏதாவது தவறு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் யாருடைய மனதையாவது எனது கருத்து புன்படுத்தியிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.. எதிர்கட்சிகளின் சட்டசபை நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்துள்ள அவர், சட்டத்தை மீறி எம்எல்ஏக்கள் செயல்படுவதாக கூறினார்.முன்னதாக இந்த ஜன்லோக்பால் மசோதா சட்டமன்றத்தில் தோல்வி அடைந்ததையடுத்து கெஜ்ரிவால் ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று சட்டசபையில் பேசிய கெஜ்ரிவால், ”அம்பானியை காப்பாற்றுவதற்காக டில்லி அரசுக்கு எதிராக காங்கிரசும், பா.ஜ.,வும் இணைந்து சதி செய்கின்றன.

மத்திய அரசுக்கு தலை வணங்க மாட்டேன்.இதனால் டில்லி சட்டசபையில் கடைசி கூட்டத்தொடர் இதுவாக இருக்கும்” என குறிப்பிட்டவர் தன் கட்சி அலுவலுலகம் வந்து ஆலோசித்திவிட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார்.டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்று 48 நாட்கள் ஆன நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் டெல்லியில் சட்டசபைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று சட்ட மந்திரி சோம்நாத் பார்தியை பதவியில் இருந்து நீக்கக் கோரி காங்கிரஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டம் முழுமையாக நடக்கவில்லை.இரண்டாவது நாளான இன்று ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய ஆம் ஆத்மி தலைமையிலான அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மசோதாவை தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று கவர்னரும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கவர்னரின் அறிவுரையை மீறி இன்று பிற்பகல் மசோதாவை தாக்கல் செய்ய அரசு முயன்றது. அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்ப்டடது. மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.ஊழலுக்கு எதிரான மசோதாவை கொண்டு வருவதை எதிர்க்கவில்லை என்றும், முறையான சட்ட நடைமுறைப்படி இந்த மசோதாவை கொண்டுவர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

பின்னர் 3.20க்கு அவை மீண்டும் கூடியபோது ஜன் லோக்பால் மசோதாவிற்கு அனுமதி அளிக்க மறுத்து கவர்னர் எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. பின்னர் அதன் மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் முயற்சித்தார். ஆனால், இதனை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து கோஷமிட்டதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த அமளிக்கிடையில் மசோதாவை முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். அத்துடன் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி மந்திரிகள் வலியுறுத்தினர்.இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதையடுத்து அரை மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து அவையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதா ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்துள்ளது. 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ள சட்டசபையில் மசோதாவிற்கு எதிராக 42 பேர் வாக்களித்துள்ளனர். 27 பேர்கள் ஆதரவாக ஓட்டளித்தனர். இதனை அடுத்து மசோதா தாக்கல் செய்யப்படவில்லை என்று சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில் டில்லி சட்டசபையில் கெஜ்ரிவால் பேசுகையில்,”சில அமைச்சர்களின் செயல்பாடுகள் கவலையை ஏற்படுத்துகிறது. நேற்று சட்டசபையில் ஏற்பட்ட ரகளைக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். ஆவணங்கள் கிழிக்கப்பட்டதும், மைக்குகள் உடைக்கப்பட்டதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போதிய அனுபவமில்லாத நாங்கள் உரிய பாடம் கற்றுக்கொண்டோம். அவையில் பேசுவதற்கு கூட எதிர்க்கட்சிகள் அனுமதி மறுக்கின்றன.ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. அம்பானியை காப்பாற்றுவதற்காக டில்லி அரசுக்கு எதிராக காங்கிரசும், பா.ஜ.,வும் இணைந்து சதி செய்கின்றன. மத்திய அரசுக்கு தலைவணங்க மாட்டேன். டில்லி சட்டசபையின் கடைசி கூட்டத்தொடராக இதுவாக இருக்கும் . மத்திய அரசின் தவறான வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அம்பானி மீது வழக்கு பதிவு செய்ததால், ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்வது தோல்வியடைய செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இந்த நிலையில், ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல் மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார் என்றும் இதையடுத்து டெல்லி அமைச்சரவையும் ராஜினாமா செய்து. ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் நஜிப் ஜங்குக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பி. டெல்லி பேரவையை கலைக்கவும் அவர் பரிந்துரை செய்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


பின்னர்ராஜினாமா செய்தது பற்றி தொண்டர்களிடம் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் விளக்கி பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற பெரும் முயற்சி மேற்கொண்டோம்.ஆனால் அதை நிறைவேற்ற முடியாததால் ராஜினாமா செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment