5 படங்களில் டம்மியாக நடிப்பதைவிட 1 படத்தில் நல்ல வேடம் நடித்தால் போதும்.
டம்மி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்றார் பியா.
பொய் சொல்லப்போறோம், கோவா, கோ போன்ற படங்களில் நடித்திருப்பவர் பியா.
எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்பில்லாமல் ஒதுங்கி இருந்தார். மீண்டும் நடிக்க வந்த அவர் கூறியதாவது:
பணம் வருகிறது என்பதற்காக நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு அது கைகொடுக்காமல்போவதைவிட நல்ல கதையாக தேர்வு செய்து ஒரு படம் நடித்தால்கூட போதும் அது சினிமாவில் நிலைத்திருக்க உதவும் என்று ஏகன் பட ஷூட்டிங்கின்போது அஜீத் எனக்கு அட்வைஸ் செய்தார்.
அது எனக்கு கிடைத்த சரியான அறிவுரையாக தெரிந்தது.
அன்றுமுதல் அதை பின்பற்ற முடிவு செய்தேன். நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன்.
அதற்கு இன்னும் பெயரிடவில்லை. மேலும் தமிழ், மலையாளத்தில் உருவாகும் இருமொழி படத்திலும் நடிக்கிறேன்.
டம்மியாக 5 படங்களில் நடிப்பதைவிட நடிக்க வாய்ப்புள்ள நல்ல வேடம் ஒன்றில் நடித்தால்போதும் என்று முடிவு செய்துள்ளேன். அஜீத் சொன்ன இந்த அறிவுரையை தொடர்ந்து பின்பற்றுவேன் என்றார்.
0 comments:
Post a Comment