இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு மசாலா பொருள் தான் மஞ்சள். இத்தகைய மஞ்சளானது உணவிற்கு நிறத்தை மட்டும் கொடுப்பதில்லை. மாறாக பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது.
இத்தகைய மஞ்சளானது அக்காலத்தில் இருந்து இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் பலவற்றில், மஞ்சளில் உள்ள நோயெதிப்பு அழற்சி தன்மையினால், மஞ்சளானது காயங்களை சரிசெய்ய உதவுவதுடன், புற்றுநோய் முதல் அல்சைமர் வரை பல உடல்நல பிரச்சனைகளையும் குணப்படுத்த பெரிதும் உதவியாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.
ஆகவே அத்தகைய பொருளை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அனைவரும் நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து இனிமேல் தவறாமல் மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.
கல்லீரலை சுத்தப்படுத்தும்
மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரலில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, கல்லீரலானது சுத்தமாக இருக்கும்.
அல்சைமர் நோயைத் தடுக்கும்
மஞ்சள் தூளில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், அதனை உணவில் சேர்த்து வந்தால், மூளையில் அமிலாய்டு என்னும் பிளேக் உருவாவது தடுக்கப்பட்டு, இதனால் மறதி நோயான அல்சைமர் நோய் ஏற்படுவது தடுக்கப்படும்
புற்றுநோயை தடுக்கும்
மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, அது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, பல வகையான புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
நாள்பட்ட மூட்டு வலி
மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், நாள்பட்ட மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் மூட்டு வலியைக் குணப்படுத்த மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர்.
எடை கட்டுப்பாடு
மஞ்சளானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
மன இறுக்க நிவாரணி
சீன மருத்துவத்தில் மஞ்சளை மன இறுக்கத்தை சரிசெய்யும் சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பொருளை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், அது மன இறுக்கத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.
கீல்வாதம்
மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மையானது இருப்பதால், இது கீல்வாதம் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே கீல்வாதம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.
எலும்புப்புரை
மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, பிற்காலத்தில் எலும்புப்புரை போன்ற முதுகு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.
0 comments:
Post a Comment