ஹன்சிகாவுடனான காதல் முறிந்துவிட்டாலும், நட்பு தொடரும், இருவரும் இணைந்து நடிப்போம் என்று கூறியுள்ளார் சிம்பு.
ஹன்சிகாவுடன் உறவு இல்லை என சிம்பு அறிவித்த பிறகு, இருவரைப் பற்றியும் ஏராளமான கதைகள் உலா வர ஆரம்பித்துவிட்டன. இருவருக்கும் இடையில் காதல் முறிந்ததற்கு பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர்.
இந்த முறிவை அறிவிக்கக் காரணம், ஹன்சிகாவின் அம்மாதான் என்று சிம்பு தரப்பில் கூறப்படுகிறது. ஹன்சிகாவை அவர் மிரட்ட ஆரம்பித்ததால், சிம்புவும் ஹன்சிகாவும் பேசி வைத்து இந்த காதல் முறிவை அறிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்கள் காதல் முறிவு குறித்து சிம்பு கூறுகையில், ஹன்சிகாவின் நலன் கருதி நான்தான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால் இருவருக்குமிடையில் நட்பு தொடரும், எங்களின் இந்த அறிவிப்பு எங்கள் தொழிலை பாதிக்காது. இருவரும் சேர்ந்து நடிக்க எந்தத் தடையும் இல்லை.
இப்போதும்கூட வாலு படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். சேர்ந்து நடிக்கிறோம். என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்றார்.
0 comments:
Post a Comment